Facing floods

 சென்னை வெள்ளம் வந்தபோதும்

தூத்துக்குடி வெள்ளம் வந்தபோதும்


ஒன்று கவனித்தேன் 

ECR சாலை உடைக்கப்பட்டது

தேசிய நெடுஞ்சாலை உடைக்கப்பட்டது


வெள்ள நீர் செல்வதற்காக.. 


இதன் பின்னால் உள்ள என்ஜினீயரிங் குறைகளை அப்படியே விட்டுவிடுவோம்.


ஆனால்


சாலை உடைக்கப்பட்ட இடத்தில் அடுத்த அரைமணி நேரத்தில்..

PRECASTING PRE FABRICATED HOLLOW RECTANGULAR OR HOLLOW SQUARE BLOCKS 

Culvert போல 

வைக்கலாமே என்று என் மூளையில் ஓடிக்கொண்டே இருந்தது..


இதை முன்கூட்டியே 


5 அடி 10 அடி உயரம் , 16 சக்கர லாரியில் கொள்ளும் நீளம்  என முன்பே செய்து வைக்க வேண்டும்.


இதற்கு பேரிடர் நிதியை பயன்படுத்த வேண்டும்.


வெள்ளம் வரும் மாவட்டங்களில்..

இந்த கான்கிரீட் பிளாக்களை

சேமித்து வைத்தால்..


சாலைகளை உடைக்கும்போது

அடுத்த அரைமணி நேரத்தில் 

உடைக்கப்பட்ட இடத்தில் பொருத்திவிடலாம்..

வெள்ள நீர் அதனுள் நிற்காமல் செல்லும்..

சாலை உடனே பயன்பாட்டுக்கு வரும்.


மீட்பு பணி வேகமாகும் .

நிவாரண பொருட்களை உடனே உள்ளே அனுப்ப முடியும்


தூத்துக்குடியில் உடைக்கப்பட்ட தேசிய சாலை 2 நாள் கழித்து தான் சரி செய்யப்பட்டது 


ரயில்வே பாதையிலும் இந்த முறையை பயன்படுத்த முடியும்..

சாதாரண சாலையை விட இது கொஞ்சம் நேரம் எடுக்கும் சரி செய்ய..


அவ்வளவு தான் 


#Governance